அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே.
திருமந்திரம் - 270
- அன்பும் சிவமும் இரண்டாய் இருப்பது என்று கூறுவர் அறிவு தெளிவு இல்லாதவர்!
- அன்பின் வடிவமே சிவம் என்பதையும், அன்பு மார்கமே சிவத்தை அடையும் மார்க்கம் என்பதையும் யாரும் அறியார்!
- அன்பு மார்கமே சிவத்தை அடையும் மார்க்கம் என்பதை எல்லோரும் அறிந்தபின் (உணர்ந்தபின்)!
- அன்பின் வடிவமாக சிவம் அமர்ந்து அருளினாரே!
கருத்து: அன்பே சிவம்!
சிவ நிலை: ஏதும் அசையா நிலை, பூரண நிலை, ஒடுங்கிய நிலை, சூன்ய நிலை, அதீத நிலை.